|
|
|
|
|
முக்கிய பகுதிகள் :: பண்ணை சார் தொழில்கள்
|
|
|
|
|
|
|
|
வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்
உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள் |
|
சிப்பிக் காளான் உற்பத்தி
கடலில் கிடைக்கும் முத்துச் சிப்பியின் வடிவத்தை இக்காளான் பெற்றுள்ளதால் சிப்பிக் காளான் எனப்படுகிறது. இக்காளானின் உற்பத்தித் திறன் 100-180 சதவிகிதம் வரை இருக்கும் என கணக்கிடப் பட்டுள்ளது. இக்காளானை எளிய முறையில் அமைக்கப்பட்ட குடிலில் உற்பத்தி செய்ய முடியும்.
காளான் குடில்
தென்னங்கீற்று வேய்ந்த குடில் காளான் சாகுபடிக்கு உகந்தது. நாளொன்றுக்கு சுமார் 10 கிலோ காளான் உற்பத்தி செய்ய 200 சதுர மீட்டர் (20x10 மீ) அளவிற்கு குடிலில் பரப்பளவு இருந்தால் போதுமானது. குடிலை இரண்டாகத் தடுத்து ஒன்றை வித்து பரவும் அறையாகவும் மற்றொன்றை காளான் வளரும் அறையாகவும் அமைக்க வேண்டும். வித்து பரவும் அறையின் வெப்பநிலை 25-30º அளவிலும், ஈரப்பதம் 85 சதவிகிதம் என்ற அளவிலும் அவசியமாக பராமரிக்கப்பட வேண்டும் . காளான் குடிலைகிழக்கு மேற்கு திசையில் அமைப்பதால் சீரான வெப்ப நிலையை உருவாக்கலாம். காளான் குடிலின் அருகில் தண்ணீர் மணல் பரப்பியும் ஈரமான சாக்குபடுதாக்களை குடிலின் உட்புறத்தில் தொங்கவிட்டு ஈரப்பதத்தை அதிகப்படுத்தலாம். சன்னல்களில் 35 காஜ் கம்பி வலைகள் பொருத்தி காளான் ஈக்களை தவிர்க்கலாம்.
படுக்கை தயாரிக்கும் முறை
தரமான, பொன்நிறமான, பூச்சி மற்றும் நோய் தாக்காத நெல் வைக்கோல்களை சுமார் ஒரு அங்குலம் நீளம் கொண்ட சிறு துண்டுகளாக வெட்டி 4-5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
ஊறவைத்த வைக்கோல் துண்டுகளை சுமார் ஒரு மணிநேரம் கொதிக்கும் தண்ணீரில் வேக வைக்க வேண்டும்.
அதிகமான அளவில் காளான் படுக்கைகளை தயாரிக்கும் பொழுது ஊறவைத்த வைக்கோல் துண்டுகளை கொதிக்கும் தண்ணீரில் வேகவைப்பதற்கு பதிலாக 100 லிட்டர் நீரில் 7.5 கிராம் கார்பன்டேசியம் மற்றும் 125 மில்லி லிட்டர் பார்மலின் கலந்த கலவையில் 16 மணி நேரம் ஊறவைக்கலாம். இவ் இரசாயன முறையில் தொற்று நீக்கம் செய்யப்பட்ட வைக்கோலில் காளான் மகசூல் குறைவாகக் காணப்படும். எனவே இம்முறையை தவிர்ப்பது நல்லது.
வேகவைத்த வைக்கோல் துண்டுகளை தண்ணீரை வடித்த பின் சுத்தமான சாக்கு படுதாவில் 65 சதவிகிதம் ஈரப்பதம் வரும்வரை நிழலில் உலர்த்த வேண்டும். (வைக்கோலை கையில் எடுத்து இறுக்கிப் பிழிந்தால் தண்ணீர் சொட்டக் கூடாது. ஆனால் அதே சமயம் ஈரப்பதம் கையில் உணரப்பட வேண்டும். இதுவே 65 சதம் ஈரப்பதம் வைக்கோலில் இருப்பதை குறிக்கும்)
இவ்வாறு உலர்ந்த வைக்கோலைக் கொண்டு 36x12 அங்குலம் பாலித்தீன் பையில் அடுக்கு முறையில் உருளை படுக்கைளாக தயாரிக்க வேண்டும். ஒரு காளான் புட்டியை இரண்டு படுக்கைகளாக தயாரிக்க பயன்படுத்தலாம். பாலித்தின் பையில் முதல் அடுக்காக வைக்கோல் துண்டுகளை நிரப்ப வேண்டும் . பின்பு இரண்டாம் அடுக்காக காளான் வித்து ஒரு கை தூவ வேண்டும். இது போல ஐந்து அல்லது ஆறு அடுக்குகள் ஒரு பாலித்தீன் பையில் தயார் செய்ய வேண்டும். பாலித்தீன் பைகளில் ஆங்காங்கே மூன்று சிறிய துளைகள் ஏற்படுத்த வேண்டும்.
தயார் செய்த உருளை படுக்கைகளை வித்து பரவும் அறையில் அடுக்குகளில் வைக்கலாம். அல்லது உரியமுறையில் தொங்கவிடலாம். படுக்கை முழுவதும் வெண்மை நிற பூசண இழைகள் 15-20 நாட்களில் தோன்றும்.
இப்படுக்கைகளை காளான் வளரும் அறைக்கு மாற்ற வேண்டும்.
பாலித்தீன் பைகளை லேசாக கிழித்துவிட்டு தினமும் படுக்கையின் மேல் இரண்டுமுறை கை தெளிப்பான் கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும்.
இரண்டு அல்லது மூன்று நாட்களில் காளான் மொட்டுக்கள் தோன்றி காளான்கள் கொத்து கொத்தாக காணப்படும்.
முதல் அறுவடை சுமார் 25 நாட்களில் ஆரம்பிக்கும். அறுவடை செய்த பின் படுக்கையில் காளான் எடுத்த மேற்பரப்பை கத்தியினால் சுரண்டிவிட்டு மீண்டும் தண்ணீர் தெளித்து வந்தால் ஐந்து நாட்களில் இரண்டாம் அறுவடை ஆரம்பிக்கும். இதேபோல் மூன்று அல்லது நான்கு அறுவடை வரைக்கும் படுக்கைகளை பயன்படுத்தலாம். படுக்கை தயாரித்தலிலிருந்து காளான் அறுவடை வரை 45-50 நாட்கள் தேவைப்படும்.
மேற்கூறிய முறைகளை கடைபிடித்து தகுந்த சூழ்நிலைகளை பராமரித்து. சிப்பிக் காளான் வளர்த்தால் இருடுக்கைகளிலிருந்து அதாவது ஒரு புட்டி வித்துக்களிலிருந்து ஒரு கிலோ முதல் 1.75 கிலோ வரை காளான் மகசூல் பெறலாம். (விளைதிறன் 100 – 180).
|
|
|
|
|
திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்
நன்னெறி ஆய்வக
முறைகள்
நன்னெறி மேலாண்மை
முறைகள் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்
கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்
தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள் |
|
|
|
|
|
|
|
குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை |
|
|
|
|
|
சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்
முக்கிய வலைதளங்கள் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|